Monday, September 28, 2015

மந்திர சித்திக்கு பிரணவம்


நாம் மாந்திரீக வேலைகளில் ஈடுபடும்போது அம்மந்திரமானது
சித்தியாவதற்கு இப்பிரணவ மந்திரத்தை பிரயோகித்தல் வேண்டும்.


பிரணவ மந்திரம் :-  

ஒம் மந்திர பிரணயா மந்திர சிவமே சிவம் ஓம் எந்திர பிரணயா எந்திர சிவமே  
சிவம் அடியேன் செய்யும் மருந்து மந்திரம் சித்திக்கப் பலிக்க அருள் புரியவே சுவாகா.

கிரியை :-
முதலில் 108 முறை உருச்செய்து சித்தி செய்துகொள்ளவும். பின்னர் எந்தவொரு மந்திர காரியங்களும் செய்யும் முன் இதனை 3 முறை கூறிவிட்டு தொடங்கவும்.


Sunday, September 27, 2015

மாரியம்மன் வசியம் (வாலாயம்)



மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு
மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை ஆவார்.
இதனால் மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இத்தகைய சக்தியை வசியம் செய்யும் போது நோய்நொடிகள் அண்டாது.
மற்றும் சகல நன்மைகளும் சகல பாக்கியமும் கிட்டும்.


மந்திரம் :‍‍‍‍‍ அரி ஓம் பகவதி திரிலோக பகவதி வசீகரி ஆனந்த கல்யாணி ஓம் தேவி வீரலெட்சுமி என் வாக்கிலும் என் மனதிலும் நிற்க நிற்கவே சுவாகா.

கிரியை : தினமும் சுத்தமாக ஸ்நானம் செய்து விளக்கேற்றி அம்மனுக்கு படையல் வைத்து வேப்பம் பத்திரம் சாத்தி நறுமலர்கள் வைத்து காலை
மாலை 108 உரு வீதம் 21 நாட்கள் செபிக்க அம்மன் வசியமாவாள்.




Thursday, September 24, 2015

ஒற்றை தலைவலிக்கு மந்திரிக்க.

மந்திரம் : ஓம் முப்பத்து முக்கோடி தேவரின் ஐந்தெழுத்தையும் நான் செப்பத்தகுமோ சிவ சிவ நசி மசி.

கிரியை : உரு 1008 முறை செபிக்க மந்திரம் சித்தியாகும். பின்னர் பிரயோகத்தின் போது நோயாளியின் தலையைப் பிடித்து மேற்படி மந்திரத்தை 108 முறை செபிக்க கடுமையான தலைவலி நிவர்த்தியாகும். இதுபோலவே இம்மந்திரத்தின் மூலம் காய்ச்சல், வயிற்றுவலி, மாந்தம் போன்ற வியாதிகளையும் குணப்படுத்த முடியும்.

Monday, September 21, 2015

முக வசீகரம் உண்டாக மந்திரம்

இது அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான பதிவு. நம்மை கண்டவர்கள் அனைவரும் எம்முடன் சினேகமாக இருக்கவும் எமது காரிய வெற்றிக்கும் இம் முக வசியமுறை கைகொடுக்கும்.
மந்திரம் : ஓம் வசி வசி ஜெகத் வசி வசிய நம.
கிரியை : ஆதிவாரம் அல்லது அமாவாசை நாளில் காரீயத் தகட்டிலோ செம்புத் தகட்டிலோ அட்சரம் கீறி தூபதீபம், பால், பழம், தேங்காய், அவல், கடலை, தாம்பூலம், பலகாரங்கள் வைத்து மந்திரத்தை 1008 முறை உச்சரித்து குளிசமாடி கட்டவேண்டியது.
பலன் : இந்த குளிசத்தை கட்டிக்கொண்டு சென்றால் ஸ்திரி வசியம், புருச வசியம், ராஜ வசியம், லோக வசியம், வழக்கு வெல்லுதல், வியாபார விருத்தி முதலிய சர்வ வசியம் உண்டாகும்.

Tuesday, September 15, 2015

சரஸ்வதி வசியம்

கலைவாணியின் அருள் இருந்தால் ஆயகலைகள் அனைத்தும் கைகூடுவது திண்ணம். நாம் கற்பவை அனைத்தும் நம் நினைவில் நிற்க அருள் புரியும் சரஸ்வதி தேவியின் வசிய முறை ஒன்றினை பார்ப்போம்.

மூலமந்திரம் : ஓம் ஹீம் வாணிதேவி வா வா சுவாகா.

கிரியை : வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான அறையில் மஞ்சள் தெளித்து அறை முழுவதும் தூபம் போட்டு பின்னர் தீபம் ஏற்றி நைவேத்யம் வைத்து மூலமந்திரத்தை 1008 உரு செபிக்க சித்தியாகும்.

பலன் : இதனால் கல்வி விருத்தியாகும். சங்கீதம் பயில்பவர்களுக்கும் மிகவும் உகந்தது.

Monday, September 14, 2015

விநாயகர் வாலாயம் (வசியம்)

மந்திரம் : ஓம் கெங் கெங் கணபதி கௌரி புத்திராயா வங் வங் வருக வருகவே சுவாகா.

அட்சரம் : முக்கோணம் கீறி நடுவில் ஓங்காரம் போடவும்.

கிரியை : வெள்ளை துணி விரித்து அதன்மேல் பச்சரிசி பரவி அட்சரம் கீறி அட்சரத்தின் மேல் கும்பம் வைக்கவும். உரு 108 வீதமாக காலை மாலை இருவேளையுமாக ஒரு மண்டலம்(48 நாட்கள்) செபிக்க சித்தியாகும். தூபதீபம் காட்டி  நறுமலர்கள், அவல், கடலை போன்ற நைவேத்தியங்கள் வைக்கவும்.

பலன் : விநாயகர் வசியமாகி நாம் செய்யும் அனைத்து காரியங்களும் தடைகள் நீங்கி சித்தியாக அருள்பாலிப்பார்.