Sunday, November 22, 2015

பேய், பசாசுக்கு குளை அடிக்க.

அரி ஓம் நமோ பச்சை நிறமும் பவளவாயும் அறையில் கட்டிய சந்திரகாவிப்பட்டும் ஒட்டியாணமும் மார்பிலிட்ட நூல்மாலையும் களுத்திலிட்ட ஆபரணமும் காதிலிட்ட கவசகுண்டலமும் கிரீடமும் திகளேந்திய இளமாது முல்லையும் நவரத்தினமாகிய பல்லும் மூக்குத்தியும் சிலம்பும் சிங்கக்கொடியும் மானொருகை மளுவொருகை சங்கொரு கை சக்கரம் ஒருகை அன்பர்க்குச் சொர்ணமளித்திடு கரமும் மஞ்சாதென்னும் மத்தியகரமும் துலங்கிய விபூதியுமாய் எழுந்தருளியிருப்பாள் என்னம்மை மோகம்புரி மாங்கிஷமாது நீயே சுவாகா ஓம் அங்ஙறிங்ங மத்தே சத்தே மரிசெய் மாசத்திரி நீலி நீலி நீலகண்டி மோகாம்புரி தூளி தூளி தூளி உச்சாடு உச்சாடு பூதப்படையும் போகாவியாதியும் பிச்சீ பித்தத்தீயும் பிடி சன்னியும் சனித்தசன்னியும் சன்னிவகை பதினெட்டும் விட்ட பசாசும் வைத்த சூனியமும் ஆலகால மரத்தில் ஆணி அறைந்ததும் மண் துறையில் புதைத்த பலபல சூனியமுள்ளதும் வயிற்றுக் கழிச்சலும் மலஞ்சலம் மறிபட்டதும் எட்டுக் குரளியும் கூடிய நஞ்சும் வேதாளபூதமும் மூன்றுகப் பிளவை முன்கண்ட மாலைகாலடியரிப்பு அரையினில் புத்துடன் பத்தெளுர் துடையினில் படுவன் தொண்ணூற்றாறும் ஐநூற்றைம்பது அழந்திடு வியாதி தொண்ணூற்றாறு தோன்றிய வியாதியும் நாநூற்றைம்பது நானாவலியும் கன்னக்கிரந்தியும் களலை கண்டமாலைகளுமின்றி எழுந்திடு மீளா வியாதியும் இருமல் ரோகம் எண்பத்துமூன்றும் தலைவலி சூலை தண்டுப்பிளவையும் அண்டவாதம் அடங்காக் கழிச்சல் பொத்திக்கரப்பான் புத்துடன் கண்வலி காயாம்பூக் காய்ச்சல் கண்ணில் சிகப்பூ விழிகண் குறுடூவிழி மினுமினுங்கல் குவளைச் சிலந்திகுத்து விப்புருதீ மோகாம்புரி நாகப்படலம் நத்தைப்படுவன்  புருவவாதம் புகைஎழு புண்ணும் சுருக்குடன் இளைப்பு முடக்கியவாதம் முப்பத்துமூன்று எழுந்திடு வியாதி எழுபத்திரென்று தோன்றியவியாதி தொண்ணூற்றாறு பிறமுனை கட்டு கட்டு கரிமுகனே வெட்டு வெட்டு வேலாயுத்தின் ஆணை சுட்டெரி சுட்டெரி ஏ நெடா கெடுவா நா நெடா மோகாம்புரி தீண்டாதவரைத் தீண்டுவதேதடா சிவனடியாரை அணுகுவதேதடா திருநம்பிமாயா ஐய்யன் கோவில் அதிரப்பிடுங்கி மற்றுள்ள கோவில் மண்டு தீயிட்டு சாமுண்டி கோவில் தனலாயெரித்து உள்ளுறங்கள் பேசிவந்தேந் வாளாலறுத்திடு விழியாலெரித்திடு சிந்தீயிற் தீயால் சினக்கும் மோகாம்புரி அம்மை கரத்தாலறுத்த மோகாம்புரியம்மை எரிதணல் மளுவால் எரிக்கும் மோகாம்புரி எரி எரி திரிபுரமெரிய அகோர உருத்திராய நம ஓடம்மா ஓடு.

பேய், பசாசு பிடித்தவர்களுக்கும் சன்னி, தோஷங்களுக்கும் இம்மந்திரம் சொல்லி வேப்பிலை அடிக்க நீங்கும்.

Tuesday, November 17, 2015

கணபதி பூஜை

சகல காரியங்களும் தடையின்றி சித்தியாவதற்கு கணபதி பூஜை செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
இதற்குரிய மந்திரம்:-
ஓம் ஆம் ஈ உம் வசி கஸ் கணபதயே நமஹா.
கிரியை முறை:- காரீயத்தகடு அல்லது செம்புத்தகடு ஆகியவற்றில் எந்திரத்தை வரைந்து வைத்துக்கொண்டு தேங்காய், பழம், இனிப்பு, அவல், கடலை, மோதகம், சுண்டல், வெற்றிலை,  பாக்கு முதலானவை வைத்து தூபதீபம் கொடுத்து நைவேத்தியம் செய்யவும். பின் தகட்டிற்கு கற்பூர ஆராத்தி செய்து நீர் விளாவிவிட்னுக்கொண்டே மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 1008 உரு வீதம் கால் மண்டலம் அதாவது 12 நாட்கள் செபிக்க சித்தியாகும்.
இதன் பலன்:- இத்தகட்டினை குளிசமாடி (தாயத்தில் அடைத்து) கட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும், சகல காரியங்களும் சித்தியாகும். இம் மந்திரத்தை செபித்து சகலதுக்கும் விபூதி மந்திரித்து கொடுக்க நன்மை உண்டாகும்.

Thursday, November 12, 2015

நாடி நிலை

சென்ற பதிவில் தேகதத்துவம் பற்றி பார்த்தோம். இனி நாடிநிலையினை எவ்வாறு அறியலாம் என பார்க்கலாம்.

வாதமானது உந்தியிலும் பித்தம் மார்பிலும் கபம் உச்சியிலும் குடிநிலையாக அமர்ந்துள்ளன. இவற்றை அறிய கரத்தைப் பிடித்து பார்க்கவேண்டும்.

ஆண் மக்களுக்கு வலக்கரத்திலும் பெண்களுக்கு இடக்கரத்திலும் நாடி பார்க்க வேண்டும்.
மணிக்கட்டுக்கு கீழே ஒரு அங்குலம் தள்ளி மூன்று விரல்களால் அழுத்தியும் தளர்த்தியும் பார்க்கும் போது ஆள்காட்டி விரலில் உணர்வது வாதம் என்றும் நடுவிரலில் உணர்வது பித்தம் என்றும் பவுத்திர விரலில் உணர்வது கபம் என்றும் அறியலாம்.
அதிகமாகப் பசியினால் வருந்தும் போதும் வெயிலில் திரிந்தபோதும் பயந்திருக்கும் போதும் மற்றும் ஸ்திரிபோகம் அனுபவித்த பின்னும் ஆற்றமுடியாத கோபம் உண்டாயிருக்கும் போதும் நாடியின் நடை நன்றாகப் புலப்படாது.

அதேபோல் லாகிரிகள் கொண்டபோது, விஷம் தீண்டியிருக்கும் போது,  தவம் பூண்டிருக்கும் போது, ஸ்நானம் செய்த போது போன்ற சந்தர்ப்பங்களில் நாடியின் நடையைக்கண்டு சொல்லமுடியாது.

கண்டத்திற்கு மேலாகிய சிரசில் வரும் நோய்களையும் இடையின் கீழாகிய கால்களில்வரும் நோய்களையும் நாடியினால் பரீட்சித்துக் கூறமுடியாதென்று பெரியோர் உரைத்துள்ளதை அறியலாம்.

Saturday, November 7, 2015

தேக தத்துவம்

சித்தவைத்தியத்தில் எமது தேகம் பற்றிய அடிப்படை விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதாவது:

அவரவர் கையில் எண்சாண் அல்லது தொண்ணூற்றாறு அங்குலம் உயரமுடையது அவரது உடல் ஆகும்.
இச்சரீரம் பிருதிவி என்னும் பூதமாகிய மண்ணால் உருவாகி, ஆகாயம் என்ற பூதத்தினிடமாக ஒடுங்கி, வாயு - தேயு - அப்பு, என்னும் மூன்று பூதங்களால் இயக்கப்பட்டிருக்கின்றது.
பஞ்சபூதத்தால் ஆக்கப்பட்ட சரீரத்தில்  எலும்பு, தோல், மாமிசம், மயிர், நாடி முதலியவைகள் பிருதிவியென்னும் பூதத்தின் அம்சங்களாகும். உதிரம், மச்சை, சுக்கிலம்,  நீர் முதலியவைகள் அப்பு என்னும் பூதத்தின் கூறாகும்.
அகங்காரம், சோம்பல், மைதுனம், பயம், நித்திரை என்பன தேயு என்னும் பூதத்தின் கூறாகும்.
ஓடல், கீறல், நடத்தல், கண்மூடல், திறத்தல், இருத்தல் ஆகியவை வாயு என்னும் பூதத்தில் கூறு.
காமம், கோபம், மதம், குரோதம், லோபம் முதலியவை ஆகாயம் என்னும் பூதத்தின் கூறாகும். இங்ஙனம் ஏற்பட்ட இருபத்தைந்து அம்சங்களும் பிறவிக் கருவிகளாக உடையவை.

இப்பிறவி கருவிகளாகவுடைய பூதங்களில் ஒன்றாகிய பிருதிவி என்னும் பூதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட தேகத்தினிடமாக எழுபத்தீராயிரம் நரம்புகள் தோன்றியிருக்கின்றன. அவைகளில் பிரதானமானவை இடைகலை, பிங்கலை, சுழிமுனை, அலம்புடை, காந்தாரி, அத்தி, சிகுவை, சங்கினி, இயல்புருடன், குரு எனப் பத்தும் ஆகும். அவைகளை இயக்குவதற்குப் பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் எனப் பத்து வாயுக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

முற்கூறப்பட்ட தசநாடியில் மூலாதாரமாக நின்றவை இடைகலை, பிங்கலை, சுழிமுனை என மூன்றில் இடைகலை, பிங்கலை இவ்விரெண்டும் வலம், இடக் கால் பெருவிரல்களில் இருந்து ஆரம்பித்து இடம், வல நாசிவரையில் கத்தரிக்கோல் போன்று மாறலாக ஓடி நிற்கும். சுழிமுனையானது நடுவே மூலாதாரத்திலிருந்து உச்சிவரை அச்சுருவாணியாக நிற்கும்.
இடைகலை, பிங்கலை, சுழிமுனை எனப் பெயர்கொண்ட மூன்று மூலாதார நாடிகளை முறையே அபானன், பிராணன், சமானன் என்னும் வாயுக்களின் இயக்கத்தால் விடும் சுவாசம் இடைகலை வாதமென்றும், பிங்கலை பித்தமென்றும், சுழிமுனை கபம் என்றும் அறியலாம்.

இடைகலை என்ற வாதமானது நாசி வழியாய் பதினாறு அங்குலம் பாய்ந்தும், பிங்கலை என்ற பித்தமானது பன்னிரென்டு அங்குலம் பாய்ந்தும், சுழிமுனையானது இரண்டு நாசி துவாரங்களுக்கும் இடையேயும் இருக்கும்.
இடைகலை, பிங்கலை, சுழிமுனை எனப்பட்ட மூன்று கலைகளாகிய பெருநாடியோடு அபானன், பிராணன், சமானன் என்னும் வாயுக்கள் சம்பந்தப்படும் காலத்தில் ஒன்றுக்கொன்று  வலிவு குறைவுபட்டிருப்பதால் வாதம் மாத்திரை ஒன்றாகவும் பித்தம் அரையாகவும் கபம் காலாகவும் ஏற்பட்டதென்று அறியலாம்.

வாதம் உந்தியிலும் பித்தம் மார்பிலும் கபம் உச்சியிலும் குடிநிலையாக அமர்ந்துள்ளன. இவற்றை அறிய கரத்தைப் பிடித்து நாடிநிலை பார்க்க வேண்டும்.
நாடிநிலை பார்ப்பது பற்றி மற்றுமோர் பதிவில் பார்ப்போம்.

Tuesday, November 3, 2015

முக வசியம்

எமது முகத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய முறையினை பயன்படுத்தலாம்.

மந்திரம்:-
ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம் திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம் காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும் லட்சுமணரும் போலே அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே சுவாகா.

கிரியை:- பூரணை தினத்தில் உரு 108 கொடுத்து சித்திசெய்து கொள்ளவும்.
பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம் சொல்லி விபூதி சாத்தவும்.

Thursday, October 29, 2015

தேவ வசியம்


தேவர்களை வசியம் பண்ணும் முறை













வசியக்கலையில் ஜன வசியம், ராஜ வசியம், ஸ்திரி வசியம், புருஷ வசியம், தேவ‌ வசியம், சத்ரு வசியம், மிருக‌ வசியம், லோக வசியம் என எட்டு வகை உண்டு. அவற்றில் தேவர்களை வசியம் பண்ணும் முறைகளில் ஒன்றினை பார்க்கலாம்.

மந்திரம் :‍‍- ஓம் அம் அம் றீம் உம் யிம் வசி சுவாஹா.
கிரியை : வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான அறையில் வெற்றிலையில் விபூதி பரப்பி உரு நாளொன்றுக்கு 1008 வீதமாக 48 நாட்கள் செய்ய வேண்டும். பால், பழம், சக்கரைப்பொங்கல்,புஷ்பங்கள், கற்பூரம், ஊதுபத்தி ஆகியன வைக்கவும்.
பூசை செய்து விபூதியை அணிந்து கொண்டால் சகல தேவர்களும் வசியமாவார்கள். 

Wednesday, October 21, 2015

சுளுக்கு நீங்க மந்திரம்.

எமது உடலிலோ மற்றவர்களது உடலிலோ ஏதேனும் பாகம் சுளுக்கிகொண்டால் அதை நீக்குவதற்கு இம்மந்திரம் உபயோகப்படும். கிரகண காலங்களில் இம்மந்திரத்தை சித்தி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மந்திரம் : ஓம் தேர் உருள தேர் வடமுருள சங்குருள சக்கரமுருள தானே வடமுருள அங்குருள ஆகாசமுருள சுளுக்கு உருண்டு திரண்டு உருள ஓடிவா ஓம் மசி வய சுவாகா.
கிரியை : முதலில் 1008 உரு சொல்லி சித்திசெய்து கொள்ள வேண்டும். பின்னர் பிரயோகத்தின்போது இரும்புகம்பி ஒன்றினால் சுளுக்குள்ள இடத்தில் வைத்து மந்திரத்தை 21 முறைகள் கூறிக்கொண்டே இழுத்து இறக்கவும்.

Saturday, October 17, 2015

வறுமை நீங்க சொர்ண வைரவர் மந்திரம்

சிவனின் வைரவர் கலைகளான அசிதாங்கர், ருருவர், சண்டையர், குரோதர், கபாலர், உன்மத்தர், பீசணர், சங்காரர் ஆகிய எட்டு கலைகளும் சித்தர்களால் ஒருமுகப்படுத்தப்பட்டு வணங்கப்பட்டவரே சொர்ண வைரவர்.
இவர் இருளை நீக்கி ஒளியைதருபவர். சொர்ண வைரவரை வணங்கி பூஜித்தால் வாழ்வின் இருளாகிய துன்பம், வறுமை முதலியன நீங்கி ஒளியான மகிழ்ச்சி, செல்வம் முதலியன பெருகும் என்பது ஐதீகம்.

சொர்ணவைரவர் மந்திரம் :- ஹரி ஓம் றீங் நவகோடி சொர்ணவைரவா வாவா ஐயும் கிலியும் சௌவும் சதா காலமும் என் முன் நிற்க சுவாஹா.

கிரியை :- வெற்றிலை, பாக்கு, பழம், இளநீர், வடை என்பன வைத்து  காலை 1008 உரு மாலை 1008 உரு வீதம் 48 நாட்கள் பூஜிக்கவும். இதனால் வறுமை நீங்கும், உலகில் செல்வாக்கு மேன்மைபடும்.

Tuesday, October 13, 2015

நவராத்திரி

"சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்" என்று திருவருட்பயன் குறிப்பிட்டது போல் அர்த்தநாதீஸ்வரராகிய சிவத்தின் செம்பாதியாகவும் சிவத்தினின்று பிரிக்க முடியாததாகிய சக்தியை வியந்து போற்றுவதாய் அமைந்த விழாக்களில் நவராத்திரி மேன்மையானது.
                                 புரட்டாதி மாதம் கன்னி இராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பிரதமைத் திதி நாள் அதிகாலையில் சூரியோதயத்தில் நவராத்திரி ஆரம்ப தினமாக அமைய வேண்டும்.
அன்னையை வழிபட உவப்பான காலம் இரவு என்பர். அதனால்தான் இந்த விழா இரவில் கொண்டாடப்படுவதாகி நவராத்திரி என்று பெயராயிற்று. வாழ்வு முழுமை பெற வாழ்வின் அடிப்படையாக வீரம்,  செல்லம்,  கல்வி என்ற மூன்று தகுதியும் நிரம்ப வேண்டும். மூன்றினதும் பூரணத்துவம்தான் நிறைவான வாழ்க்கை ஆகும்.
                             செயல், முயற்சி, உறுதி, ஊக்கம், திறமை என்பவற்றின் திரண்ட நிலைதான் வீரம். இந்த வகை வீர நினைவுடன் நவராத்திரி கால முதல் மூன்று தினங்களும் துர்க்கை வழிபாடு நடைபெறும். துர்க்கை(பார்வதி) பரமசிவனின் சக்தி. அவன் பாகத்துறைபவள். சக்தியை இம் மூன்று நாட்களும் பொங்கல், வடை, பால், பழங்கள், பானகம் வைத்து இம்மந்திரத்தை தினம் 108 முறை ஜெபித்தவாறு வணங்கலாம்.
"சக்தி என்னும் தேவி வணங்குகின்றேன் உன்னையம்மா அங் வங் சிங் வங் சிவாய நமஹ ஓம் வங் வங் சிங் பெருந்தேவி வசி வசி தேவி சக்தியெனும் தேவி நீ அருள் தந்து வந்திடுவாய் வசி வசி சுவாகா அகிலத்தைக் காப்பவளே அகிலாண்ட ஈஸ்வரியே ஓம் வசி வசி சக்தி வசி வசி சுவாகா.
  
                                அடுத்து வரும் மூன்று நாட்களும் செல்வத்துக்குரிய தேவியாகிய மகாலட்சுமியின் நாட்களாகும். மகாலட்சுமி மஹாவிஸ்ணுவின் சக்தி. அவர் மார்பில் உறைபவள். லட்சுமி தேவியை குத்துவிளப்கிற்கு மாலை, குங்குமம் என்பன இட்டு விளக்கேற்றி அவல், பால்பாயாசம், பழவகைகள், தேங்காய் முதலியன வைத்து கீழ் கண்ட மந்திரத்தை 108 முறை உச்சரித்தவாறு பூஜிக்கலாம்.
"ஓம் லட்சுமி தேவி உன்னருள் நித்தம் வேண்டும் உயரிய செல்வம் தந்து அருளையும் பொழிய வேண்டும் ஓம் ரீம் மகாலட்சுமி துணையாக நீ இருக்க வேண்டும் ஐயும் கிலியும் சவ்வும் அங் உங் வங் வங் ஆகாச லட்சுமி நீ அடிமேல் அடிவைத்து வர வேண்டும் அனைத்து செல்வமும் தந்து நீ சர்வலட்சுமியாய் திகழ வேண்டும் வா வா நசி மசி வசி வசி நமஹ வந்தெனக்கு அருள் தந்து ஒளியூட்ட வேண்டும் அம்மா"   

                     இறுதி மூன்று நாட்களும் கல்வித் தெய்வமாகிய சரஸ்வதி தேவியின் நாட்களாகும். சரஸ்வதி பிரமனின் சக்தி. அவர் நாவினை இருப்பிடமாக கொண்டவள். கலைமகளை வாழைஇலையில் சுண்டல், பொரி, வடை, பஞ்சாமிர்தம் முதலியவை வைத்து கீழுள்ள மந்திரத்தை 108 முறை செபித்து பூஜை செய்யலாம்.
"நல்லறிவை நான் பெறவே நாயகியே வணங்குகிறேன் நாமகளே சரஸ்வதியே அறியாமை விலகிடவே அரி ஓம் என்று சொல்லி உன்பாதம் பணிகின்றேன் ஐயும் கிலியும் சௌவும் சிவாய நமஹ வா வா தேவி நசி மசி சரஸ்வதியே அங் சிங் வங் வங் சுவாகா தேவியே".

நவராத்திரியின் ஒன்பதாவது நாள் மகாநவமி ஆகும். இந்த மகாநவமி காரணமாகவே நவராத்திரி மகாநோன்பு ஆயிற்று. பத்தாவது நாள் விஜயதசமி ஆயுத பூசையுடன் நிறைவு பெறுகின்றது.

வராத்திரிக்கு கும்பம் வைக்கும் முறையானது வாழையிலையில் புனிதமான மண் பரவி மண்பானையில் நீர்நிறைத்துக் கும்பம் வைக்க வேண்டும். கும்பத்தை சூழ நவதானியங்கள் விதைத்து அன்று மட்டும் நீர் தெளிக்க வேண்டும். அடுத்து வரும் தினங்களில் நீர் தெளிக்க வேண்டியதில்லை. கும்பம் மண்பாணையில் வைக்கப்பட்டுள்ளமையால் பானையிலிருந்து கசியும் நீரிலேயே தானியம் முளைகொண்டு வளரும். கும்பத்துக்கு அண்மையாக சக்திகளின் படங்கள் தொங்கவிடப்படலாம். தீபம் ஒன்று ஆணையாமல் தினமும் சுடர்விட்டுக் கொண்டே இருப்பது நல்லது. நாளும் மலர்கள் கொண்டு அலங்கரிப்பதோடு அவல், கடலை, நாவற்பழம்,  கற்கண்டு முதலிய நிவேதனங்கள் வைக்கலாம். வழமையான நிவேதனப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, பழம், இளநீர் அல்லது தேங்காய் என்பனவும் நிவேதிக்கப்பட வேண்டும். தீபதூப ஆராதனைகள் முடிந்ததும் அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை முதலியவற்றை படிக்கலாம். பத்தாவது நாள் கும்ப நீரை தீர்த்த கிணற்றிலோ ஆற்றிலோ கடலிலோ கலக்க வேண்டும்.

நவராத்திரி விழாவை வீடுகளில் கொலு வைத்து வழிபடும் முறை கவர்ச்சிகரமானது. ஐந்து படி அல்லது ஏழு படி வரக்கூடிய முறையில் மேடையை அமைத்து அலங்கார பொம்மைகளை ஒழுங்காக அடுக்கி வைப்பர். அங்கே புனிதம் பேணப்பட வேண்டும். பக்கத்தில் கும்பமும் வைத்து வழிபடலாம்.

நவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் முப்பெரும் சக்திகளின் அருள் எமக்கு கிட்டும். இத்தேவியரின் கடைக்கண் பார்வை பட்டவர்களுக்கு இவ்வையகத்தில் பெறக்கூடிய பேறு வேறேதும் இல்லை.

                         

Monday, October 12, 2015

திருஷ்டி போக்கும் மந்திரம்.

மனிதர்களுக்கோ அல்லது வீடு, வியாபார ஸ்தலங்கள் போன்றவற்றுக்கோ திருஷ்டி கழிப்பதற்கு சிவனுக்கு ஒப்பாக கருதப்படும் முக்கண்ணனாகிய தேங்காய் முன்னிலை வகிக்கின்றது.
                          இந்த தேங்காய்மூலம் திருஷ்டியை போக்குவதற்கும் ஒரு மந்திர முறை உண்டு. இம்முறை மூலம் திருஷ்டி கழிப்பதால் சகலவிதமான திருஷ்டிகளும் அகல்வதோடு செய்யும் காரியங்களிலும் சித்தி உண்டாகும்.

மந்திரம் :- ஓம் முக்கண்ணனே உகந்தநாதா சோலைபுரி ஸ்தூலபூபா சடைநிறைந்த மட்டைமன்னா திருஷ்டிக்கு முதன்மையான மைந்தனே சிரசுடையமுகம் கொண்டோனே வாவாவா ஓம் ரீம் சுவாகா.

முறை :- இம்மந்திரத்தை 1008 முறை உருச்செய்ய மந்திரம் சித்தியாகும். பின்னர் பிரயோகத்தின் போது திருஷ்டி கழிக்கவேண்டியவரை வடகிழக்கு திசை நோக்கியவாறு நிறுத்தி மந்திரத்தை 21 தடவைகள் உச்சரித்தவாறு திருஷ்டி கழிக்கவும். வீடு, வியாபார ஸ்தலம் போன்றவற்றுக்கு திசை அவசியமில்லை. 21 முறை கூறி திருஷ்டி கழித்த பின் தேங்காயை உடைக்கவும்.

Saturday, October 10, 2015

மாந்திரீகம் கற்க விரும்புவோர்க்கு.

அன்பர்களுக்கு வணக்கம்;
எம்மிடம் அநேகமான நண்பர்கள் மாந்திரீகம் கற்பிக்குமாறு கேட்கின்றனர். அவர்களுக்கு தனித்தனியே பதில் கூற அடியேனுக்கு நேரமில்லாமையால் இப்பதிவை இடுகின்றேன்.
மாந்திரீகம் கற்க விரும்பும் அன்பர்கள் அனைவரும் தங்களது முழுப்பெயர் மற்றும் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு எமக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
pavananthan8@gmail.com

Tuesday, October 6, 2015

வயிரவர் அகவல்.

சீர் புகழ் வயிரவன் செந்தமிழ் உரைக்க‌
கார் புகழ் மேனிக் கணபதி அருளே
ஆதிபராபரி அருளிய நூதல்விழி
சோதி போலெழும்பி சுடரொழியாகி
வீதியில் எழும்பி விசும்பையும் கடந்து
ஓதிய மந்திரம் உட்சாடனமாய்
ஓங்காரம் கொண்டு ஒரு முகமாகி
ஆங்காரம் கொண்டகாரமாகி
விக்கினம் தீர்க்கும் விறுமவயிரவா
அப்பமும் அவலும் ஆலங்காயும்
செப்பிய மாங்கனி திகழ் தட்டுறட்டி
தேன் கதலிப்பழம் பலாப்பழம்
அத்தனை எல்லாம் அருந்திடுவைரவா
ஐயும் கிலியும் அகோர வைரவா
மவ்வும் கிலியும் ஆன வைரவா

சவ்வும் கிலியும் சங்கார வைரவா
றியுங் கிலியும் ஏறு வயிரவா
பவ்வும் கிலியும் பாதாள வயிரவா
சதியோடு அருள்புரி சச்சுதானந்தா
பாம்பெலும் பணியும் பராபர சொரூபமே
சாம்பலும் அணிந்து தலையோடேத்தி
சுடலையில் நின்று சுடலை காத்தாயே
கெங்கைக் கரையில் கிருபாகரனே
நம்பின பேர்க்கு நடனம் புரிந்து
பாரிக்கும் பேயை பதற அடித்து
பக்கப் பசாசை பதறத் துரத்தி
ஈடளித்திடுவாய் ஏக வயிரவா
ஐயனே உந்தன் அருளுண்டானால்
வையகம் பிணி வாதபித்தம் வந்திடு சிலேட்டுமம்
அப்பிணி எல்லாம் அகற்றிடு வயிரவா
கையில் பிடித்த கண்ட கோடாலியும்
காதிலணிந்த கவச குண்டலமும்
காலில் தரித்த தண்டை பாடகமும்
பாதக் கொலிசு பழ பழ என்றொலிக்க‌
நாத வீணை நலம் பெற முழங்க‌
செம்பொன் மேனியும் திருநீற்றழகும்
உச்சும் குடும்பியும் உதிர வாயும்
அலறிய பல்லும் அண்ணார்ந்த பார்வையும்
அரையில் கட்டிய காவியொட்டியாணமும்
சூலமும் மழுவும் சுடரொழி வாழும்
அன்பாய் வந்து அடியேன் செய் பூசையை
நன்பாய் வந்து நல்லருள் புரிவாய்
நாய் வாகனத்தில் நடனமிடுபவா
கெங்கை கரையில் கிருபாகரனே
நம்பின பேர்க்கு நல்வரமளிப்பாய்
நான்முகன் சிரசை நறுக்கிய வயிரவா
நளின காளியுடன் நடனம் புரிந்தவா
எப்போதும் என்னை ரட்சித்தருள்வாய்
ஈசன் தன் திருமகனே
மாதன வாவி மலர்த் தடாகத்தருகில்
தானத்தில் வாழும் தற்பரா சரணம்
உச்சிப் பருவத்துதித்துக் களிக்கும்
சச்சிதானந்தா சரணம் சரணம்.

Thursday, October 1, 2015

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல்  சரணே! (72)