Sunday, November 22, 2015

பேய், பசாசுக்கு குளை அடிக்க.

அரி ஓம் நமோ பச்சை நிறமும் பவளவாயும் அறையில் கட்டிய சந்திரகாவிப்பட்டும் ஒட்டியாணமும் மார்பிலிட்ட நூல்மாலையும் களுத்திலிட்ட ஆபரணமும் காதிலிட்ட கவசகுண்டலமும் கிரீடமும் திகளேந்திய இளமாது முல்லையும் நவரத்தினமாகிய பல்லும் மூக்குத்தியும் சிலம்பும் சிங்கக்கொடியும் மானொருகை மளுவொருகை சங்கொரு கை சக்கரம் ஒருகை அன்பர்க்குச் சொர்ணமளித்திடு கரமும் மஞ்சாதென்னும் மத்தியகரமும் துலங்கிய விபூதியுமாய் எழுந்தருளியிருப்பாள் என்னம்மை மோகம்புரி மாங்கிஷமாது நீயே சுவாகா ஓம் அங்ஙறிங்ங மத்தே சத்தே மரிசெய் மாசத்திரி நீலி நீலி நீலகண்டி மோகாம்புரி தூளி தூளி தூளி உச்சாடு உச்சாடு பூதப்படையும் போகாவியாதியும் பிச்சீ பித்தத்தீயும் பிடி சன்னியும் சனித்தசன்னியும் சன்னிவகை பதினெட்டும் விட்ட பசாசும் வைத்த சூனியமும் ஆலகால மரத்தில் ஆணி அறைந்ததும் மண் துறையில் புதைத்த பலபல சூனியமுள்ளதும் வயிற்றுக் கழிச்சலும் மலஞ்சலம் மறிபட்டதும் எட்டுக் குரளியும் கூடிய நஞ்சும் வேதாளபூதமும் மூன்றுகப் பிளவை முன்கண்ட மாலைகாலடியரிப்பு அரையினில் புத்துடன் பத்தெளுர் துடையினில் படுவன் தொண்ணூற்றாறும் ஐநூற்றைம்பது அழந்திடு வியாதி தொண்ணூற்றாறு தோன்றிய வியாதியும் நாநூற்றைம்பது நானாவலியும் கன்னக்கிரந்தியும் களலை கண்டமாலைகளுமின்றி எழுந்திடு மீளா வியாதியும் இருமல் ரோகம் எண்பத்துமூன்றும் தலைவலி சூலை தண்டுப்பிளவையும் அண்டவாதம் அடங்காக் கழிச்சல் பொத்திக்கரப்பான் புத்துடன் கண்வலி காயாம்பூக் காய்ச்சல் கண்ணில் சிகப்பூ விழிகண் குறுடூவிழி மினுமினுங்கல் குவளைச் சிலந்திகுத்து விப்புருதீ மோகாம்புரி நாகப்படலம் நத்தைப்படுவன்  புருவவாதம் புகைஎழு புண்ணும் சுருக்குடன் இளைப்பு முடக்கியவாதம் முப்பத்துமூன்று எழுந்திடு வியாதி எழுபத்திரென்று தோன்றியவியாதி தொண்ணூற்றாறு பிறமுனை கட்டு கட்டு கரிமுகனே வெட்டு வெட்டு வேலாயுத்தின் ஆணை சுட்டெரி சுட்டெரி ஏ நெடா கெடுவா நா நெடா மோகாம்புரி தீண்டாதவரைத் தீண்டுவதேதடா சிவனடியாரை அணுகுவதேதடா திருநம்பிமாயா ஐய்யன் கோவில் அதிரப்பிடுங்கி மற்றுள்ள கோவில் மண்டு தீயிட்டு சாமுண்டி கோவில் தனலாயெரித்து உள்ளுறங்கள் பேசிவந்தேந் வாளாலறுத்திடு விழியாலெரித்திடு சிந்தீயிற் தீயால் சினக்கும் மோகாம்புரி அம்மை கரத்தாலறுத்த மோகாம்புரியம்மை எரிதணல் மளுவால் எரிக்கும் மோகாம்புரி எரி எரி திரிபுரமெரிய அகோர உருத்திராய நம ஓடம்மா ஓடு.

பேய், பசாசு பிடித்தவர்களுக்கும் சன்னி, தோஷங்களுக்கும் இம்மந்திரம் சொல்லி வேப்பிலை அடிக்க நீங்கும்.

Tuesday, November 17, 2015

கணபதி பூஜை

சகல காரியங்களும் தடையின்றி சித்தியாவதற்கு கணபதி பூஜை செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
இதற்குரிய மந்திரம்:-
ஓம் ஆம் ஈ உம் வசி கஸ் கணபதயே நமஹா.
கிரியை முறை:- காரீயத்தகடு அல்லது செம்புத்தகடு ஆகியவற்றில் எந்திரத்தை வரைந்து வைத்துக்கொண்டு தேங்காய், பழம், இனிப்பு, அவல், கடலை, மோதகம், சுண்டல், வெற்றிலை,  பாக்கு முதலானவை வைத்து தூபதீபம் கொடுத்து நைவேத்தியம் செய்யவும். பின் தகட்டிற்கு கற்பூர ஆராத்தி செய்து நீர் விளாவிவிட்னுக்கொண்டே மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 1008 உரு வீதம் கால் மண்டலம் அதாவது 12 நாட்கள் செபிக்க சித்தியாகும்.
இதன் பலன்:- இத்தகட்டினை குளிசமாடி (தாயத்தில் அடைத்து) கட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும், சகல காரியங்களும் சித்தியாகும். இம் மந்திரத்தை செபித்து சகலதுக்கும் விபூதி மந்திரித்து கொடுக்க நன்மை உண்டாகும்.

Thursday, November 12, 2015

நாடி நிலை

சென்ற பதிவில் தேகதத்துவம் பற்றி பார்த்தோம். இனி நாடிநிலையினை எவ்வாறு அறியலாம் என பார்க்கலாம்.

வாதமானது உந்தியிலும் பித்தம் மார்பிலும் கபம் உச்சியிலும் குடிநிலையாக அமர்ந்துள்ளன. இவற்றை அறிய கரத்தைப் பிடித்து பார்க்கவேண்டும்.

ஆண் மக்களுக்கு வலக்கரத்திலும் பெண்களுக்கு இடக்கரத்திலும் நாடி பார்க்க வேண்டும்.
மணிக்கட்டுக்கு கீழே ஒரு அங்குலம் தள்ளி மூன்று விரல்களால் அழுத்தியும் தளர்த்தியும் பார்க்கும் போது ஆள்காட்டி விரலில் உணர்வது வாதம் என்றும் நடுவிரலில் உணர்வது பித்தம் என்றும் பவுத்திர விரலில் உணர்வது கபம் என்றும் அறியலாம்.
அதிகமாகப் பசியினால் வருந்தும் போதும் வெயிலில் திரிந்தபோதும் பயந்திருக்கும் போதும் மற்றும் ஸ்திரிபோகம் அனுபவித்த பின்னும் ஆற்றமுடியாத கோபம் உண்டாயிருக்கும் போதும் நாடியின் நடை நன்றாகப் புலப்படாது.

அதேபோல் லாகிரிகள் கொண்டபோது, விஷம் தீண்டியிருக்கும் போது,  தவம் பூண்டிருக்கும் போது, ஸ்நானம் செய்த போது போன்ற சந்தர்ப்பங்களில் நாடியின் நடையைக்கண்டு சொல்லமுடியாது.

கண்டத்திற்கு மேலாகிய சிரசில் வரும் நோய்களையும் இடையின் கீழாகிய கால்களில்வரும் நோய்களையும் நாடியினால் பரீட்சித்துக் கூறமுடியாதென்று பெரியோர் உரைத்துள்ளதை அறியலாம்.

Saturday, November 7, 2015

தேக தத்துவம்

சித்தவைத்தியத்தில் எமது தேகம் பற்றிய அடிப்படை விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதாவது:

அவரவர் கையில் எண்சாண் அல்லது தொண்ணூற்றாறு அங்குலம் உயரமுடையது அவரது உடல் ஆகும்.
இச்சரீரம் பிருதிவி என்னும் பூதமாகிய மண்ணால் உருவாகி, ஆகாயம் என்ற பூதத்தினிடமாக ஒடுங்கி, வாயு - தேயு - அப்பு, என்னும் மூன்று பூதங்களால் இயக்கப்பட்டிருக்கின்றது.
பஞ்சபூதத்தால் ஆக்கப்பட்ட சரீரத்தில்  எலும்பு, தோல், மாமிசம், மயிர், நாடி முதலியவைகள் பிருதிவியென்னும் பூதத்தின் அம்சங்களாகும். உதிரம், மச்சை, சுக்கிலம்,  நீர் முதலியவைகள் அப்பு என்னும் பூதத்தின் கூறாகும்.
அகங்காரம், சோம்பல், மைதுனம், பயம், நித்திரை என்பன தேயு என்னும் பூதத்தின் கூறாகும்.
ஓடல், கீறல், நடத்தல், கண்மூடல், திறத்தல், இருத்தல் ஆகியவை வாயு என்னும் பூதத்தில் கூறு.
காமம், கோபம், மதம், குரோதம், லோபம் முதலியவை ஆகாயம் என்னும் பூதத்தின் கூறாகும். இங்ஙனம் ஏற்பட்ட இருபத்தைந்து அம்சங்களும் பிறவிக் கருவிகளாக உடையவை.

இப்பிறவி கருவிகளாகவுடைய பூதங்களில் ஒன்றாகிய பிருதிவி என்னும் பூதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட தேகத்தினிடமாக எழுபத்தீராயிரம் நரம்புகள் தோன்றியிருக்கின்றன. அவைகளில் பிரதானமானவை இடைகலை, பிங்கலை, சுழிமுனை, அலம்புடை, காந்தாரி, அத்தி, சிகுவை, சங்கினி, இயல்புருடன், குரு எனப் பத்தும் ஆகும். அவைகளை இயக்குவதற்குப் பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் எனப் பத்து வாயுக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

முற்கூறப்பட்ட தசநாடியில் மூலாதாரமாக நின்றவை இடைகலை, பிங்கலை, சுழிமுனை என மூன்றில் இடைகலை, பிங்கலை இவ்விரெண்டும் வலம், இடக் கால் பெருவிரல்களில் இருந்து ஆரம்பித்து இடம், வல நாசிவரையில் கத்தரிக்கோல் போன்று மாறலாக ஓடி நிற்கும். சுழிமுனையானது நடுவே மூலாதாரத்திலிருந்து உச்சிவரை அச்சுருவாணியாக நிற்கும்.
இடைகலை, பிங்கலை, சுழிமுனை எனப் பெயர்கொண்ட மூன்று மூலாதார நாடிகளை முறையே அபானன், பிராணன், சமானன் என்னும் வாயுக்களின் இயக்கத்தால் விடும் சுவாசம் இடைகலை வாதமென்றும், பிங்கலை பித்தமென்றும், சுழிமுனை கபம் என்றும் அறியலாம்.

இடைகலை என்ற வாதமானது நாசி வழியாய் பதினாறு அங்குலம் பாய்ந்தும், பிங்கலை என்ற பித்தமானது பன்னிரென்டு அங்குலம் பாய்ந்தும், சுழிமுனையானது இரண்டு நாசி துவாரங்களுக்கும் இடையேயும் இருக்கும்.
இடைகலை, பிங்கலை, சுழிமுனை எனப்பட்ட மூன்று கலைகளாகிய பெருநாடியோடு அபானன், பிராணன், சமானன் என்னும் வாயுக்கள் சம்பந்தப்படும் காலத்தில் ஒன்றுக்கொன்று  வலிவு குறைவுபட்டிருப்பதால் வாதம் மாத்திரை ஒன்றாகவும் பித்தம் அரையாகவும் கபம் காலாகவும் ஏற்பட்டதென்று அறியலாம்.

வாதம் உந்தியிலும் பித்தம் மார்பிலும் கபம் உச்சியிலும் குடிநிலையாக அமர்ந்துள்ளன. இவற்றை அறிய கரத்தைப் பிடித்து நாடிநிலை பார்க்க வேண்டும்.
நாடிநிலை பார்ப்பது பற்றி மற்றுமோர் பதிவில் பார்ப்போம்.

Tuesday, November 3, 2015

முக வசியம்

எமது முகத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய முறையினை பயன்படுத்தலாம்.

மந்திரம்:-
ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம் திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம் காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும் லட்சுமணரும் போலே அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே சுவாகா.

கிரியை:- பூரணை தினத்தில் உரு 108 கொடுத்து சித்திசெய்து கொள்ளவும்.
பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம் சொல்லி விபூதி சாத்தவும்.

Thursday, October 29, 2015

தேவ வசியம்


தேவர்களை வசியம் பண்ணும் முறை













வசியக்கலையில் ஜன வசியம், ராஜ வசியம், ஸ்திரி வசியம், புருஷ வசியம், தேவ‌ வசியம், சத்ரு வசியம், மிருக‌ வசியம், லோக வசியம் என எட்டு வகை உண்டு. அவற்றில் தேவர்களை வசியம் பண்ணும் முறைகளில் ஒன்றினை பார்க்கலாம்.

மந்திரம் :‍‍- ஓம் அம் அம் றீம் உம் யிம் வசி சுவாஹா.
கிரியை : வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான அறையில் வெற்றிலையில் விபூதி பரப்பி உரு நாளொன்றுக்கு 1008 வீதமாக 48 நாட்கள் செய்ய வேண்டும். பால், பழம், சக்கரைப்பொங்கல்,புஷ்பங்கள், கற்பூரம், ஊதுபத்தி ஆகியன வைக்கவும்.
பூசை செய்து விபூதியை அணிந்து கொண்டால் சகல தேவர்களும் வசியமாவார்கள். 

Wednesday, October 21, 2015

சுளுக்கு நீங்க மந்திரம்.

எமது உடலிலோ மற்றவர்களது உடலிலோ ஏதேனும் பாகம் சுளுக்கிகொண்டால் அதை நீக்குவதற்கு இம்மந்திரம் உபயோகப்படும். கிரகண காலங்களில் இம்மந்திரத்தை சித்தி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மந்திரம் : ஓம் தேர் உருள தேர் வடமுருள சங்குருள சக்கரமுருள தானே வடமுருள அங்குருள ஆகாசமுருள சுளுக்கு உருண்டு திரண்டு உருள ஓடிவா ஓம் மசி வய சுவாகா.
கிரியை : முதலில் 1008 உரு சொல்லி சித்திசெய்து கொள்ள வேண்டும். பின்னர் பிரயோகத்தின்போது இரும்புகம்பி ஒன்றினால் சுளுக்குள்ள இடத்தில் வைத்து மந்திரத்தை 21 முறைகள் கூறிக்கொண்டே இழுத்து இறக்கவும்.